உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / 2 வயது குழந்தையிடம் நகை திருடிய பெண் கைது

2 வயது குழந்தையிடம் நகை திருடிய பெண் கைது

அரூர், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த ராமியம்பட்டியை சேர்ந்த ஆனந்தன் மனைவி பூந்தளிர், 44. இவரது, 2 வயது பேத்தி ஆராத்யா, நேற்று காலை, 11:00 மணிக்கு வீட்டின் முன், விளையாடிக் கொண்டிருந்தார். அந்த வழியாக சென்ற பெண் ஒருவர், குழந்தையின் காதில் இருந்த ஒரு கிராம் தோடு மற்றும் காலில் இருந்த, 2 கொலுசுகளை திருடியுள்ளார். அதை கண்ட பூந்தளிரின் உறவினர் சரோஜா என்பவர் கூச்சலிட்டுள்ளார். அக்கம், பக்கத்தினர் அந்த பெண்ணை விரட்டி பிடித்து கோபிநாதம்பட்டி போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர் பெத்துாரை சேர்ந்த வெங்கடேசன் மனைவி சுலோச்சனா, 29, என தெரிந்தது. அவரிடமிருந்து தோடு, கொலுசுகளை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர். ஏற்கனவே, சுலோச்சனா மீது மாடு திருடிய, 3 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி