உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / கழுத்து அறுத்த நிலையில் சாலையோரம் பெண் உடல் மீட்பு

கழுத்து அறுத்த நிலையில் சாலையோரம் பெண் உடல் மீட்பு

பாலக்கோடு: பாலக்கோடு அருகே, கழுத்து அறுக்கப்பட்ட நிலையில், நெடுஞ்சாலையோரத்தில் கிடந்த பெண் சடலத்தை போலீசார் மீட்டு விசாரிக்கின்றனர். தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு, கொம்மநாயக்கனஅள்ளி அருகே, தர்மபுரி - -ஓசூர் தேசிய நெடுஞ்சாலையோரம், 45 வயது மதிக்கத்தக்க பெண் உடல், கழுத்தறுக்கப்பட்ட நிலையில் கிடந்தது. பாலக்கோடு போலீசார் அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அதில், கழுத்தறுக்கப்பட்டு இறந்து கிடந்தவர் தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே மந்தைவெளியை சேர்ந்த கணபதி என்பவரின் மனைவி வள்ளி என்பது தெரிந்தது. கணவன் - மனைவி, கடந்த, 15 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருவதும் தெரிந்தது. இதையடுத்து, நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு, வள்ளி கொலை செய்யப்பட்டது ஏன்; கொலையாளிகள் யார் என போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை