உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / தர்மபுரியில் மகளிர் தின கொண்டாட்டம்

தர்மபுரியில் மகளிர் தின கொண்டாட்டம்

தர்மபுரி, தர்மபுரியில், பல்வேறு அலுவலகங்கள் மற்றும் அமைப்புகளின் சார்பில், மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.மகளிர் தினத்தையொட்டி, தர்மபுரி மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களுக்கு, எஸ்.பி., ஸ்டீபன் ஜேசுபாதம் வாழ்த்துக்களை தெரிவித்தார். இதேபோல், பாலக்கோடு அரசு மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு, பாலக்கோடு பா.ஜ., சார்பில் இனிப்பு வழங்கி மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. மாவட்ட மகளிர் அணி தலைவி சங்கீதா, செயலாளர் வள்ளி உள்பட பலர் பங்கேற்றனர்.பாலக்கோடு தாசில்தார் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள், மகளிர் தினம் கொண்டாடினர். இதையொட்டி மகளிர் ஒன்றிணைந்து கேக் வெட்டி மகிழ்ந்தனர். பின், பெண்களுக்கு போட்டி நடத்தி அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி