உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / போலீஸ்காரரை மதுபாட்டிலால் தாக்கிய வாலிபருக்கு வலை

போலீஸ்காரரை மதுபாட்டிலால் தாக்கிய வாலிபருக்கு வலை

அரூர்: தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் அண்ணல்நகரை சேர்ந்தவர் தமிழ்மணி, 27. இவர், கோவை மாநகர காட்டூர் ஸ்டேஷனில், 2ம் நிலை காவலராக பணிபுரிந்து வருகிறார். பொங்கல் பண்டி-கையையொட்டி விடுப்பில் ஊருக்கு வந்த தமிழ்மணி, அரூர் அடுத்த பாளையத்தில் உள்ள பாட்டி பழனியம்மாள் வீட்டிற்கு சென்றார்.கடந்த, 16ல் இரவு, 9:45 மணிக்கு நண்பர் முகேசுடன், கருணாமூர்த்தி என்பவரது வீட்டின் அருகில் சென்றார். அப்-போது, எதிரே பாளையத்தை சேர்ந்த சந்தோஷ் மற்றும் பிரவின்-குமார், 27, ஆகியோர் கலைநிகழ்ச்சி பார்க்க தமிழ்மணியை அழைத்துள்ளனர். அதற்கு மறுப்பு தெரிவித்த தமிழ்மணியை தகாத வார்த்தையால் திட்டிய பிரவின்குமார், மதுபாட்டிலை உடைத்து தாக்கியதில் காயமடைந்த தமிழ்மணி, அரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். புகார் படி, அரூர் போலீசார் பிரவின்குமாரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை