உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வடமதுரையில் ஆடித்தேர்

வடமதுரையில் ஆடித்தேர்

வடமதுரை : வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயில் ஆடித்திருவிழாவில், இன்று மாலை, தேரோட்டம் நடக்கிறது.ஆண்டுதோறும் ஆடி மாத பவுர்ணமியில் 13 நாட்கள் இத்திருவிழா நடக்கிறது. கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நாள் தோறும் மண்டகபடிதாரர்களால் சுவாமி புறப்பாடு, சிறப்பு வழிபாடு நடக்கிறது. நேற்று முன்தினம் இரவு சவுந்தரவல்லி தாயார் சன்னதியில் திருக்கல்யாணம் நடந்தது. தேரோட்டம்: முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று மாலை 3 மணிக்கு நடக்கிறது. சிறப்பு வழிபாடுகளை தொடர்ந்து ஸ்ரீதேவி, பூமாதேவியுடன் சவுந்தரராஜ பெருமாள் திருக்கல்யாண கோலத்துடன், சன்னதியில் இருந்து தேரில் எழுந்தருளுவார்.பக்தர்கள் தேர்வடம் பிடிக்க திண்டுக்கல் ரோடு, மேற்கு, வடக்கு ரத வீதிகள், ஒட்டன்சத்திரம் ரோடு வழி நகரை வலம் வந்து, இரவு 8 மணிக்கு தேர் நிலையை அடையும். பக்தர்கள் அபிஷேக, ஆராதனை செய்து வழிபடுவர். தேரோட்டத்தை முன்னிட்டு ராகவேந்திர ஆன்மிக அறக்கட்டளை சார்பில் சொர்க்க வாசல் முன், அன்னதானம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை