10 நாளாக வராத காவிரி குடிநீர்; மக்கள் பாதிப்பு
வேடசந்துார்: கரூர் காவிரி ஆற்றின் கட்டளை பகுதியில் கிணறுகள் அமைத்து ராட்சத குழாய்கள் வழியாக வேடசந்துார், ஒட்டன்சத்திரம் நகர் பகுதிகளுக்கு காவிரி குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்த குழாய் பாதையில் தண்ணீர் கசிவு இருந்ததால் அதை சரி செய்ய காவிரி குடிநீர் நிறுத்தப்பட்டு குழாய்களை சரி பார்க்கும் பணிகள் சில நாட்களாக நடந்து வருகின்றன. இதனால் 10 நாட்களாக தண்ணீர் சப்ளை இல்லை . வேடசந்துார் நகர் சுற்றுப்பகுதி மக்கள் பாதிக்கின்றனர்.வேடசந்துார் குடிநீர் வடிகால் வாரிய உதவி பொறியாளர் மணிமேகலையிடம் கேட்டபோது,'' கரூர் காவிரி ஆற்றில் மோட்டாரை இயக்கி தண்ணீர் எடுத்து விட்டோம். மீண்டும் பாளையம் பகுதியில் உடைப்பு ஏற்பட்டதால் நிறுத்தப்பட்டது. சரி செய்யும் பணி நடைபெறுகிறது. இன்று மாலை அல்லது நாளை ( செப்.8) காலை காவிரி குடிநீர் வந்துவிடும் ''என்றார்.