உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / போலீசை தாக்கிய போதை நபர்களை புரட்டி எடுத்த மக்கள்

போலீசை தாக்கிய போதை நபர்களை புரட்டி எடுத்த மக்கள்

வத்தலக்குண்டு: வத்தலக்குண்டில் போதையில் போலீஸ்காரரை தாக்கிய இளைஞர்களுக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். வத்தலக்குண்டு திண்டுக்கல் ரோட்டில் இளைஞர்கள் மூன்று பேர் போதையில் அவ்வழியாக செல்வோரிடம் ரகளையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். ரோந்து பணி போலீஸ் ஏட்டு முத்துடையார் போதை இளைஞர்களை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டார். அப்போது அந்த இளைஞர்களுக்கும் போலீசுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் முத்துடையார் போதை இளைஞர்களால் தாக்கப்பட்டார். இதை பார்த்துக் கொண்டிருந்த பொதுமக்கள் போலீஸ் ஏட்டை தாக்கிய போதை இளைஞர்களுக்கு தர்மஅடி கொடுத்தனர். இதை தொடர்நது போதையில் ரகளையில் ஈடுபட்ட அய்யன்கோட்டையை சேர்ந்த சுதன் பிரபு, அழகிரி, ஜெயராஜ் உள்ளிட்ட மூன்று பேரை வத்தலக்குண்டு போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ