கண்ணாடியை உடைத்த இருவர் கைது
நத்தம் : -நத்தம் நேரு நகரை சேர்ந்தவர் சதீஸ்பாண்டி 21 .இவரது நண்பர் பிரகாஷ்ராஜ் 23. இருவரும் குடிபோதையில் நத்தம் அரசு மருத்துவமனை சென்று உடல்நிலை சரியில்லை ஊசி போடுங்கள் என கூறி உள்ளனர். மருத்துவர்கள் சிறிது நேரம் பொறுங்கள் என கூறி உள்ளனர். ஆத்திரமடைந்த இருவரும் மருத்துவர்களை தகாத வார்த்தைகளால் திட்டி மருத்துவமனையின் கண்ணாடியை கல்லை கொண்டு எறிந்து உடைத்துள்ளனர். நத்தம் எஸ்.ஐ., விஜயபாண்டியன் கண்ணாடியை உடைத்த சதீஸ்பாண்டி, பிரகாஷ்ராஜ் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.