உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / அனுமதி பெறாத 15 ஆவின் கடைகளை அகற்ற முடிவு

அனுமதி பெறாத 15 ஆவின் கடைகளை அகற்ற முடிவு

திண்டுக்கல் : திண்டுக்கல் நகரில் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி மாநகராட்சியில் அனுமதி பெறாமல் செயல்படும் 15 ஆவின் கடைளை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.திண்டுக்கல்லில் ஆவின் கடை நடத்துபவர்கள் சிலர் மாநகராட்சி நிர்வாகத்திடம் அனுமதி பெறாமல் கண்ட இடத்தில் கடையை திறந்து வியாபாரத்தில் ஈடுபடுகின்றனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க சென்றால் அரசியல் வாதிகளிடம் பேசி அதிகாரிகளை 'ஆப்'செய்கின்றனர். இதனிடையே ஆவின்,மாநகராட்சி நிர்வாகத்தில் அனுமதி பெறாமல் செயல்படும் கடைகளின் விபரங்களை மாநகராட்சி அதிகாரிகள் சேகரித்தனர். திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட், பழநி ரோடு,நத்தம் ரோடு,திருச்சி ரோடு,ஆர்.எம்.காலனி,மெங்கில்ஸ் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் 15 ஆவின் கடைகள் அனுமதி பெறாமல் செயல்படுவது கண்டறியப்பட்டது. இவற்றை அகற்ற நகரமைப்பு அலுவலர்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி விரைவில் அதற்கான பணியில் ஈடுபட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி