உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பழநி வைகாசி விழாவில் திரு ஊடல் நிகழ்ச்சி

பழநி வைகாசி விழாவில் திரு ஊடல் நிகழ்ச்சி

பழநி: பழநி பெரியநாயகியம்மன் கோயில் வைகாசி விசாக திருவிழா திரு ஊடல் நிகழ்ச்சி,கொடி இறக்கத்துடன் நிறைவு பெற்றது.பழநி முருகன் கோயில் நிர்வாகத்திற்கு உட்பட்ட பெரியநாயகியம்மன் கோயில் வைகாசி விசாக விழா மே 16ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. மே 21 ல் வள்ளி, தெய்வானை, முத்துக்குமாரசுவாமி திருக்கல்யாணம் மே 22ல் திருத்தேரோட்டம் நடைபெற்றது.விழாவின் பத்தாம் நாளான நேற்று (மே 25) காலை தெய்வானை சப்பரத்தில் இருந்து தனிபல்லக்கில் கோயிலுக்குள் செல்ல நடைசாற்றும் திரு ஊடல் நிகழ்ச்சி நடந்தது. இதில் வீரபாகுவாக ஓதுவார், சிவநாகராஜன் சென்று சமரசம் செய்ய வள்ளி, தெய்வானை, முத்துக்குமாரசுவாமிக்கு தீபாராதனை நடந்தது. இதை தொடர்ந்து இரவு திருக்கொடி இறக்குதலுடன் வைகாசி விசாக விழா நிறைவு பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை