உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பஸ்சை இயக்காததால் பயணிகள் மறியல்

பஸ்சை இயக்காததால் பயணிகள் மறியல்

நத்தம : நத்தம் பஸ் ஸ்டாண்டில் சிறுகுடிக்கு பஸ்களை இயக்காததை கண்டித்து நேற்று முன்தினம் இரவு பயணிகள் மறியலில் ஈடுபட்டனர் .நத்தம் பஸ் ஸ்டாண்டில் பல்வேறு வழித்தடங்களுக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. கிராமங்களில் இருந்து தினக்கூலி வேலைக்காக மதுரை ,திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அதிகமானோர் சென்று வருகின்றனர். சிறுகுடிக்கு இரவு 8.30 மணிக்கு அவிச்சிப்பட்டி வழியாக செல்ல வேண்டிய பஸ் இயக்கப்படாததால் சிறுகுடி அதன் சுற்று கிராம பகுதி பயணிகள் பஸ்ஸ்டாண்டில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். நத்தம் போலீசார் பேச்சுவார்த்தையில் குறிப்பிட்ட நேரத்திற்கு பஸ்கள் இயக்கப்படும் என உறுதி அளிக்க கலைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை