உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பார்வையற்றவர்கள் மனு

பார்வையற்றவர்கள் மனு

திண்டுக்கல் : கலெக்டர் அலுவலகத்தில் பொது குறை தீர் கூட்டம் நடந்தது. கலெக்டர் நாகராஜன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அருண்மணி, துணை கலெக்டர் முருகவேல் பங்கேற்றனர். இதில், பாறைமேட்டுத்தெருவை சேர்ந்த பிச்சமுத்து (54), மனைவி பரமேஸ்வரி(48) என்ற பார்வையற்றவர்கள் மனு கொடுத்தனர். இவர்களது மகன் கோதண்ட சக்தி ராமன் (14), 8 ம் வகுப்பு படிக்கிறார். பெற்றோருடன் இவர், கலெக்டரிடம் கொடுத்த மனுவில், 'கூரை வீட்டில் வசிக்கிறோம். எங்கள் வீட்டிற்கு பட்டா வேண்டும். பராமரிப்பு நிதி வேண்டும்,' என, கூறியிருந்தனர். இதற்கான நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதி அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை