உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / இ --பாஸ் மூலம் ஒரு வாரத்தில் 1.27 லட்சம் பயணிகள் வருகை

இ --பாஸ் மூலம் ஒரு வாரத்தில் 1.27 லட்சம் பயணிகள் வருகை

திண்டுக்கல், : இ --பாஸ் மூலம் மே 7 முதல் இதுவரை 1.27 லட்சம் பயணிகள் கொடைக்கானலுக்கு வந்துள்ளனர்.கொடைக்கானல் வரும் வெளி மாநில , மாவட்ட வாகனங்களுக்கு இ--பாஸ் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி மே 7 முதல் நேற்று மாலை 4:00 மணி வரை 71,864 வாகனங்கள் மூலம் 4,45,088 பயணிகள் வெவ்வேறு தேதிகளில் கொடைக்கானல் வருவதற்காக விண்ணப்பித்து இ--பாஸ் பெற்றுள்ளனர். இதில் நேற்று மட்டும் 16,951 வாகனங்கள் மூலம் 93,115 பயணிகள் இ-பாஸ் பெற்றுள்ளனர்.இதுவரை 18,506 வாகனங்கள் மூலம் 1,27,032 பயணிகள் கொடைக்கானலுக்கு வந்துள்ளனர். நேற்று மட்டும் 1,685 வாகனங்கள் மூலம் 11,951 பயணிகள் வந்துள்ளனர். இன்று கொடைக்கானலுக்கு வர 2,330 வாகனங்கள் மூலம் 16,848 பயணிகள் இ--பாஸ் பெற்றுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ