உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வெடி விபத்தில் 2 பேர் கைது

வெடி விபத்தில் 2 பேர் கைது

நத்தம் : திண்டுக்கல் மாவட்டம்நத்தம் அருகே ஆவிச்சிபட்டியைச் சேர்ந்தவர் செல்வம் 49. இவர் அப்பகுதி மலை அடிவார பகுதியில் நடத்தி வந்த பட்டாசு ஆலையில் ஆக., 25 ல் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் அங்கு பணிபுரிந்த விருதுநகர் மாவட்டம் சிவகாசி திருத்தங்கலைச் சேர்ந்த கண்ணன் 42, விஸ்வநத்தத்தைச் சேர்ந்த முனீஸ்வரன் 30, ஆகியோர் உடல் சிதறி பலியானார்கள். தலைமறைவான செல்வத்தை தனிப்படை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் ஏரக்காபட்டி பகுதியில் பதுங்கியிருந்த செல்வம், அவரது தொழில் பங்குதாரரான அரியலுாரைச் சேர்ந்த அருண்பிரசாத் 39, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை