உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / விரைவில் 2 லட்சம் ரேஷன் கார்டுகள் ; அமைச்சர் சக்கரபாணி

விரைவில் 2 லட்சம் ரேஷன் கார்டுகள் ; அமைச்சர் சக்கரபாணி

ஒட்டன்சத்திரம்: ''விரைவில் 2 லட்சம் ரேஷன் கார்டுகள் வழங்கப்படும்'' என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.ஒட்டன்சத்திரம் சட்டசபை தொகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து காளாஞ்சிபட்டி அரசு போட்டித் தேர்வு பயிற்சி மையத்தில் நடந்த ஆய்வு கூட்டத்தில் ரேஷன் கடை விற்பனையாளர்களிடம் கருவிழி பதிவு கருவிகளை வழங்கிய அவர் பேசியதாவது:தமிழகத்தில் 35 ஆயிரம் ரேஷன் கடைகளுக்கும் கண் கருவிழி பதிவு வழங்கப்பட்டு வருகிறது. மூன்று ஆண்டுகளில் 15.75 லட்சம் ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. விரைவில் 2 லட்சம் ரேஷன் கார்டுகள் வழங்கப்பட உள்ளன. சிறிய ஊராட்சிகளில் குறைந்தது 5 ஆயிரம் ,பெரிய ஊராட்சிகளில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் வளர்க்க வேண்டும். வீட்டுக்கு ஒரு மரம் வளர்க்க வேண்டும் என்றார். கலெக்டர் பூங்கொடி தலைமை வகித்தார். திண்டுக்கல் எம்.பி., சச்சிதானந்தம் முன்னிலை வகித்தார்.குடிநீர் வடிகால் வாரிய பொறியியல் இயக்குனர் நடராஜன், தலைமை பொறியாளர் ஆறுமுகம், திட்ட இயக்குனர் திலகவதி, பழநி ஆர்.டி.ஓ., சரவணன், நகராட்சி தலைவர் திருமலைசாமி ,துணைத் தலைவர் வெள்ளைச்சாமி, ஒன்றிய தலைவர்கள் அய்யம்மாள், சத்திய புவனா கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை