உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / டிவைடரை தாண்டி பள்ளத்தில் கவிழ்ந்த பட்டாசு லாரி; பெரும் விபத்து தவிர்ப்பு

டிவைடரை தாண்டி பள்ளத்தில் கவிழ்ந்த பட்டாசு லாரி; பெரும் விபத்து தவிர்ப்பு

வேடசந்துார் : சிவகாசியில் இருந்து பட்டாசு பெட்டிகளை ஏற்றி சென்ற லாரி கல்வார்பட்டி ரங்கமலை கணவாய் அருகே டிவைடரை தாண்டி சென்று பள்ளத்தில் உள்ள மரத்தில் மோதி கவிழ்ந்தது.சிவகாசியில் இருந்து தனியார் கொரியர் சர்வீஸ் லாரி ஒன்று 167 பட்டாசு பெட்டிகளை ஏற்றிக்கொண்டு சேலம் நோக்கி சென்றது. லாரியை தர்மபுரியை சேர்ந்த டிரைவர் சிவசங்கர் 32, ஓட்டிச் சென்றார். கல்வர்பட்டி அருகே அதிகாலை 3:00 மணிக்கு சென்றபோது லாரி டிரைவரின் துாக்க கலக்கத்தால் கட்டுப்பாட்டை இழந்த லாரி டிவைடரை தாண்டி மறு புறம் ரோட்டை கடந்து பள்ளத்துக்கு சென்றதோடு அங்குள்ள மரத்தில் மோதி கவிழ்ந்தது.இதில் பட்டாசு பெட்டிகள் சிதறின. எதிர்ப்புற ரோட்டில் வாகனங்கள் ஏதும் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. கூம்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை