உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / யானை கூட்டத்தை வழியனுப்ப 16 பேர் குழு

யானை கூட்டத்தை வழியனுப்ப 16 பேர் குழு

திண்டுக்கல்: பழநி ஆயக்குடியில் சுற்றி திரியும் யானை கூட்டத்தை வனத்திற்குள் அனுப்புவதற்காக 16 பேர் கொண்ட வனத்துறை குழு களமிறங்கி உள்ளது.ஆயக்குடி பகுதியில் 5 யானைகள் கொண்ட யானைக்கூட்டம் விவசாய நிலத்திற்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகிறது. கிராம மக்களையும் அச்சுறுத்தும் வகையில் அங்கும் இங்குமாய் சுற்றித்திரிகின்றன. யானைக்கூட்டத்தை வனப்பகுதிகளுக்குள் அனுப்ப வேண்டும் என திண்டுக்கல் வனத்துறை அதிகாரிகளை விவசாயிகள் நாடினர். இதை தொடர்ந்து திண்டுக்கல் மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார் தலைமையில் 16 பேர் கொண்ட வனக்குழுவினர் ஆயக்குடி பகுதியில் முகாமிட்டுள்ளனர். விவசாய நிலங்களில் சுற்றித்திரியும் யானைகளை வனப்பகுதிகளுக்குள் அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !