உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / நான்கு வழிச்சாலை குறுக்காக கடந்த மின் லைன் அடையாளம் தெரியாத வாகனம் மோதி துண்டிப்பு பெரும் விபத்து தவிர்ப்பு

நான்கு வழிச்சாலை குறுக்காக கடந்த மின் லைன் அடையாளம் தெரியாத வாகனம் மோதி துண்டிப்பு பெரும் விபத்து தவிர்ப்பு

வேடசந்துார் : வேடசந்துார் காக்காத்தோப்பூர் அருகே நான்கு வழிச்சாலை குறுக்காக கடந்த உயர் அழுத்த மின் லைன் அடையாளம் தெரியாத வாகனம் மோதி அறுந்தது. உடனடியாக சப்ளை துண்டிக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.வேடசந்துார் காக்காத்தோப்பூர் பிரிவு அருகே உயர் அழுத்த மின் லைன் திண்டுக்கல் கரூர் நான்குவழிச்சாலை குறுக்காக கடந்து செல்கிறது. இந்த லைன் மீது அடையாளம் தெரியாத கனரக வாகனம் மோதி சென்றதில் ரோட்டின் இருபுறமும் நடப்பட்டிருந்த மின்கம்பங்கள் வளைந்து சாய்ந்த நிலையில் மின் லைன் துண்டிக்கப்பட்டு கிடக்கிறது. உடனடியாக மின் சப்ளை நிறுத்தப்பட்டு அறுந்த மின் லைன் அப்புறப்படுத்தப்பட்டன. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.மின் லைன் அறுந்து ஒரு வாரம் ஆன நிலையில் இன்னும் நெடுஞ்சாலை யொட்டிய பகுதியில் மின் சப்ளை இல்லை. வளைந்த மின்லைனையும் இன்னும் அப்புறப்படுத்தவில்லை.உதவி செயற்பொறியாளர் சிவராமனிடம் கேட்டபோது, வாகனம் மோதி மின் லைன் அறுந்ததுகுறித்து போலீசில் புகார் கொடுத்துள்ளோம். போலீசார் விசாரித்து வருகின்றனர். மின்வினியோகத்திற்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ