உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / இடியும் நிலையில் பழமையான கோயில் கட்டடம்

இடியும் நிலையில் பழமையான கோயில் கட்டடம்

திண்டுக்கல்: திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் புதிய கட்டடம் கட்டுவதற்காக பின்புறம் இடிக்கப்பட்ட நிலையில் முன்புறமாக கடைகள் அடங்கிய பழமையான கட்டடம் இடியும் நிலையில் ஆபத்தை நோக்கி காத்திருக்கிறது. பெரும் விபத்து நிகழும் என்பது தெரிந்தும் மாநகராட்சி நிர்வாகம், ஹிந்து அறநிலையத்துறை எதையும் கண்டுக்காது வேடிக்கை பார்ப்பது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலிருந்து எதிர்புறமாக 50 மீட்டர் தொலைவிலுள்ள தேர் நிறுத்தும் இடத்தில் 100 ஆண்டுகளுக்கு மேலான கட்டடம் உள்ளது. இந்த கட்டடத்தின் பின்பகுதியில் ஹிந்து அறநிலையத்துறை , அபிராமி அம்மன் கோயில் சார்பில் புதிய திருமண மண்டபம் கட்டுவதற்காக டெண்டர் விடப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கி உள்ளன.இதற்காக ஏற்கனவே இருந்த பழைய கட்டடங்கள் இடிக்கப்பட்டதில் பல்வேறு பிரச்னைகள் எழுந்துள்ளன. முதலில் பழைமையான கற்துாண்கள் கிடப்பில் போடப்பட்ட விவகாரம், பின்னர் தேர் மண்டபம் இரவோடு , இரவாக இடிக்கப்பட்டது என பிரச்னைகள் உள்ளன.இந்நிலையில் கட்டுமானம் நடக்கும் இடத்திற்கு முன்பாக 100 ஆண்டுகளுக்கு மேலான பழமை வாய்ந்த கட்டடம் உள்ளது. அதில் வணிகத்திற்காக கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளது. ஆனால் கட்டடம் பழைமை வாய்ந்தது என்பதால் இதையும் இடித்து முழுமையாக கடைகளுடன் கூடிய கட்டடம் கட்ட வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது. கட்டடம் பழமை வாய்ந்தது என்பதால் எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயம் உள்ளது. இதனால் இப்பகுதியை கடக்கும் பக்தர்கள், கடைவீதிக்கு வரும் பொதுமக்கள்ஒரு வித தயக்கத்துடனே சென்று வருகின்றனர்.தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் பகுதியாக உள்ள இந்த இடத்தில் கட்டடத்தை உடனடியாக கோயில் நிர்வாகம், ஹிந்து அறநிலையத்துறை,மாநகராட்சிஆய்வு மேற்கொண்டு இதையும் இடித்து அகற்றினால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்படும். பார்க்கும் போது கம்பீரமாக இருப்பதாக கட்டடம் தெரிந்தாலும் ஆபத்து நிறைந்திருக்கிறது. சமீபத்தில் கூட பிச்சை முைஹதீன் சந்து பகுதியில் உள்ள 3 மாடிகள் கொண்ட பழமையான வீடு இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. அதன்பின் பழமையான கட்டங்கள் குறித்து ஆய்வு நடத்த வேண்டுமென கோரிக்கைகள் எழுந்தது. இந்நிலையில் நகரின் முக்கிய பகுதி, கடைவீதிகள் அதிகம் உள்ள இடத்தில் கோயிலுக்கு சொந்தமான பழைய கட்டடம் இடியும் நிலையில் இருப்பது தெரிந்தும் கண்டுக்காமல் உள்ளது மாநகராட்சி நிர்வாகம் மீது மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Nandakumar Naidu.
ஜூலை 25, 2024 17:07

கோயில்களின் வெளியே உள்ள வேற்று மதத்தினரின் கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும்.


அப்புசாமி
ஜூலை 25, 2024 13:44

அங்கே இன்னும்.கடை.போட்டு வியாபாரம் நடத்துபவர்களுக்கே தங்கள் உயிர்மேல் அக்கறையில்லை. மத்தவங்க எதுக்கு கவலைப் படணும்?


N Sasikumar Yadhav
ஜூலை 25, 2024 07:12

அந்த கட்டீடத்தில் கடைகளை வைத்து கொண்டிருக்கும் சிறுபான்மையினர் பாதிப்படைவதால் இடிக்க மாட்டார்கள்


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி