உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மருத்துவமனை செல்ல அடம் பிடித்த மூதாட்டி

மருத்துவமனை செல்ல அடம் பிடித்த மூதாட்டி

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் ரோட்டில் மயங்கி விழுந்து காயமான மூதாட்டி மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வராமல் நடுரோட்டில் அடம் பிடிக்க அழைத்து செல்ல வந்த ஆம்புலன்சும் திரும்பி சென்றது. திண்டுக்கல் ஒய்.எம்.ஆர்.பட்டியை சேர்ந்த மூதாட்டி மேரி75. சிலுவத்துார் ரோடு பகுதியில் நடந்து சென்ற போது மயங்கி விழுந்தார். மூதாட்டிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. அக்கம்பக்கத்தினர் மூதாட்டியை மீட்டு ஆம்புலன்சில் அரசு மருத்துவமனைக்கு அனுப்ப முயன்றனர். ஆனால் மேரி ஆம்புலன்சில் ஏற மறுத்து வீட்டுக்கு போகனும் என்னை விடுங்கள் என அழுது அடம் பிடித்தார். தலையில் ரத்தம் வழிந்தபடி இருந்ததால் ஆம்புலன்ஸ் ஊழியர்களும் அவருக்கு சிகிச்சை கொடுக்க முயன்றனர். அதற்கும் மூதாட்டி ஒத்துழைப்பு தராததால் அவர்களும் அங்கிருந்து புறப்பட்டனர். முடிவில் அங்கிருந்தவர்கள் மூதாட்டி மேரியை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை