உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / விழிப்புணர்வு ஊர்வலம்

விழிப்புணர்வு ஊர்வலம்

திண்டுக்கல் : ஜி.டி.என். கலைக் கல்லுாரி சமூகப் பணித்துறை,சிம்கோடஸ் சார்பில் உலக போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் திண்டுக்கல் ஏ.வெள்ளோடு கிராமத்தில் நடந்தது. மாணவர்கள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி கோஷங்கள் எழுப்பியப்படி வெள்ளோடு பஸ் ஸ்டாண்ட் முதல் கிராமத்தின் முக்கிய விதிகள் வழியாக ஊர்வலமாக சென்றனர். பேராசிரியர் ராஜா வரவேற்றார். ஏ.வெள்ளோடு ஊராட்சி தலைவர் இளங்கோ,துணைத்தலைவர் ஷாலினி துவக்கி வைத்தனர்.பேராசிரியர் கதிரவன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை பேராசிரியர்கள் ரெஜினா,ஹரிஷா செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ