உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பூப்பந்தாட்ட போட்டி:தாடிக்கொம்பு அணி வெற்றி

பூப்பந்தாட்ட போட்டி:தாடிக்கொம்பு அணி வெற்றி

திண்டுக்கல் : திண்டுக்கல் எம்.எஸ்.பி.,பள்ளி,முன்னாள் மாணவர்கள் சங்கம் இணைந்து தேசிய நல்லாசிரியர் ரத்தின பாண்டியன் நினைவு சுழற் கோப்பைக்கான மாநில அளவிலான சீனியர் ஆடவர் ஐவர் பூப்பந்தாட்ட போட்டி நடந்தது. பல்வேறு மாவட்டங்களிலிருந்து 28 அணிகள் பங்கேற்றது.இதில் தாடிக்கொம்பு ஏ.ஆர்., பூப்பந்தாட்ட அணி முதல் பரிசு வென்றது. செங்கல்பட்டு ஜே.ஜே., பாய்ஸ் அணி 2ம் பரிசும், பரங்கிப்பேட்டை பி.எம்.டீ., அணி 3ம் பரிசும், தருமபுரி துரை பயர்ஸ் அணி 4ம் பரிசும், திருவெற்றியூர் டி.பி.பி.சி., அணி 5ம் பரிசும் பெற்றது. இவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. எம்.எஸ்.பி., பள்ளி தாளாளர்முருகேஷன் தலைமை வகித்தார். எஸ்.பி., பிரதீப் பரிசு வழங்கினார். மாவட்ட கால்பந்தாட்ட கழக செயலர்சண்முகம் முன்னிலை வகித்தார்.பள்ளியின் முன்னாள் மாணவர் சங்க துணைத்தலைவர் சண்முகவேலு, மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவா, சங்க இணைச் செயலர் கணேஷ், என்.பி.ஆர்., குழும சி.இ.ஓ., சிவக்குமார், ஜி.டி.என்., கல்லுாரி சி.இ.ஓ., துரை, சங்கத்தின் பொருளாளர் மதிதேவராஜ் பங்கேற்றனர். தமிழக பூப்பந்தாட்ட கழக துணைத் தலைவர் சீனிவாசன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி