உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கிரி வீதியில் கடைகளுக்கு முன் தடுப்பு

கிரி வீதியில் கடைகளுக்கு முன் தடுப்பு

பழநி : நீதிமன்ற உத்தரவின் படி பழநி கிரிவீதி கடைகளுக்கு முன் தடுப்பு அமைக்கப்படுகிறது.பழநி கிரிவீதியில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் படி ஆக்கிரமிப்புகளை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் படி ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு கிரி வீதியில் வாகனங்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற வழிகாட்டுதலின்படி பட்டா நிலத்தில் கடை வைத்துள்ள கடைக்காரர்களின் இடத்திற்கு முன் 'பேரி கார்டு' அமைத்தனர். தற்போது கிரி வீதி கடைகளுக்கு முன் அமைக்கப்பட்ட பேரிக்கார்டுகளை அகற்றிவிட்டு ஒரு அடி சுவருடன் நான்கு அடி பென்சிங் அமைக்கப் படுகிறது. கிரி வீதிக்கு வரும் பக்தர்கள் நான்கு அடி பாதையில் கடைக்கு சென்று வரலாம்.2.8 கி.மீ., கிரி வீதியை முழுவதும் ஒரு அடி அடித்தளம் 5 அடி பென்சிங் தடுப்பு அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை