உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஓட்டன்சத்திரத்தில் பீட்ரூட் அறுவடை தீவிரம் விலை கிடைக்காமல் விவசாயிகள் விரக்தி

ஓட்டன்சத்திரத்தில் பீட்ரூட் அறுவடை தீவிரம் விலை கிடைக்காமல் விவசாயிகள் விரக்தி

ஒட்டன்சத்திரம், : ஒட்டன்சத்திரம் பகுதியில் பீட்ரூட் அறுவடை தீவிரம் அடைந்துள்ள நிலையில் கட்டுபடியான விலை கிடைக்காமல் விவசாயிகள் அவதிப்படுகின்றனர்.ஒட்டன்சத்திரம், காளாஞ்சிபட்டி, பாவாயூர், காவேரியம்மாபட்டி, அத்தப்பகவுண்டனுார், பெரிய கோட்டை சுற்றிய பகுதிகளில் பீட்ரூட் அதிகமாக பயிரிடப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு பயிரிட்டப்பட்ட பீட்ரூட் அறுவடை பணி தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள், கூலி தொழிலாளர்கள் பீட்ரூட்டை பறித்து மூடைகளில் மார்க்கெட்டுக்கு அனுப்புகின்றனர்.நேற்று தரமான பீட்ரூட் கிலோ ரூ.20க்கு விற்றது. சிறிய ,சற்று தரம் குறைந்த பீட்ரூட் ரூ.20க்கு கீழ் விற்பனையானது. பீட்ரூட் பறிக்க ஒரு நாள் கூலியாக ஒருவருக்கு ரூ. 350 கொடுக்க வேண்டியுள்ளது. இத்துடன் உழவு, விதைப்பு, உரம், பூச்சி மருந்து பராமரிப்பு என பீட்ரூட்டை அறுவடை செய்ய அதிகம் செலவாகிறது. விற்பதற்கு காய்கறி மார்க்கெட்டில் கமிஷனும் கொடுக்க வேண்டும். இவற்றையெல்லாம் கணக்கு பார்த்தால் தற்போது இருக்கும் விலையானது விவசாயிகளுக்கு கட்டுபடியாகாது. பீட்ரூட் ஒரு கிலோ ரூ.40 க்கு மேல் விற்றால்தான் நஷ்டம் ஏற்படாது என விவசாயிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை