மேலும் செய்திகள்
ஒட்டன்சத்திரத்தில் விலை குறைந்த டிஸ்கோ கத்தரி
28-Aug-2024
ஒட்டன்சத்திரம்:ஒட்டன்சத்திரம் பகுதியில் பீட்ரூட் அறுவடை மும்முரம் அடைந்துள்ள நிலையில் மார்க்கெட்டுக்கு வரத்து அதிகரித்துள்ளதால் கட்டுப்படியான விலை கிடைக்காமல் விவசாயிகள் அவதிப்படுகின்றனர்.ஒட்டன்சத்திரம், காளாஞ்சிபட்டி, பாவாயூர், காவேரியம்மாபட்டி, அத்தப்பகவுண்டனுார், பெரிய கோட்டை சுற்றிய பகுதிகளில் பீட்ரூட் அதிகமாக பயிரிடப்படுகிறது. பல பகுதிகளில் பீட்ரூட் அறுவடை செய்யும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. ஜூலையில் பீட்ரூட் கிலோ ரூ.26 க்கு விற்பனையான நிலையில் நேற்று தரமான பீட்ரூட் கிலோ ரூ.7க்கு விற்றது. சிறிய , சற்று தரம் குறைந்த பீட்ரூட் ரூ.7 க்கு கீழ் விற்பனையானது. பீட்ரூட் பறித்தெடுக்க ஒரு நாள் கூலியாக ஒரு நபருக்கு ரூ. 350 க்கு மேல் கொடுக்க வேண்டியுள்ளது. இத்துடன் உழவு, விதைப்பு, உரம், பூச்சி மருந்து பராமரிப்பு என பீட்ரூட்டை அறுவடை செய்ய இன்னும் அதிகமாக செலவு செய்ய வேண்டிய உள்ளது. காய்கறி மார்க்கெட்டில் கமிஷனும் கொடுக்க வேண்டும். இவற்றையெல்லாம் கணக்கு பார்த்தால் தற்போது விற்கும் விலையானது விவசாயிகளுக்கு கட்டுப்படியாகாது. பீட்ரூட் ஒரு கிலோ ரூ.30 க்கு மேல் விற்றால்தான் கட்டுபடியாகும் என விவசாயிகள் தெரிவித்தனர்.
28-Aug-2024