உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / இடைநிலை ஆசிரியர் பணிக்கு அழைப்பு

இடைநிலை ஆசிரியர் பணிக்கு அழைப்பு

திண்டுக்கல் : திண்டுக்கல் கலெக்டர் பூங்கொடி அறிக்கை: மாவட்டத்தில் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் அரசு உண்டு உறைவிட தொடக்கப்பள்ளி, நல்லலுார்காடுவளவு பள்ளியில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடம் தற்காலிக தொகுப்பூதியம் அடிப்படையில் நியமனம் செய்யப்பட உள்ளது. கல்வித்தகுதிகளுடன் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். விருப்பமுள்ளவர்கள் கல்விச்சான்றுகளுடன் விண்ணப்பங்களை திண்டுக்கல் மாவட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல அலவலகத்தில் நேரடியாகவோ, தபால் மூலமாகவோ ஜூலை 8க்குள் அளிக்க வேண்டும் எனக்குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்