உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / அடிக்கடி பழுதாகும் லொடக்கு பஸ்களை மாற்றலாமே: போக்குவரத்து துறை கவனிக்குமா

அடிக்கடி பழுதாகும் லொடக்கு பஸ்களை மாற்றலாமே: போக்குவரத்து துறை கவனிக்குமா

மாவட்ட முழுவதும் திண்டுக்கல், நத்தம், வத்தலக்குண்டு, ஒட்டன்சத்திரம், பழநி, வேடசந்துார் பகுதிகளில் அரசு போக்குவரத்து கழக டிப்போக்கள் உள்ளன. இவற்றிலிருந்து 700 அரசு வெளியூர்,டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில் பாதி அளவிற்கு மேல் உள்ள பஸ்கள் குறிப்பிட்ட காலத்தை கடந்து இயங்கிக் கொண்டிருப்பதால் ஆங்காங்கே பழுதாகி நிற்கிறது. அப்பொழுது பழுதுகளை நீக்குவதற்கு பணிமனைகளில் இருந்து ஆட்கள் வந்தால் மட்டுமே நின்ற பஸ்சை மீண்டும் இயக்க முடிகிறது. இதேபோன்று மலைப்பகுதிகளில் இயக்கப்படும் பஸ்களின் நிலைமையும் படுமோசமாக உள்ளது. சமீபத்தில் பெரும்பாறையில் ஒரு பஸ் இதேபோன்று நின்று பயணிகள் பாதியில் இறங்கி விடப்பட்டனர். நேற்று காலை வத்தலக்குண்டிலிருந்து தாண்டிக்குடி வழியாக ஒட்டன்சத்திரம் செல்லும் அரசு பஸ் தாண்டிக்குடியிலேயே நின்றது. மேற்கொண்டு இயக்க முடியவில்லை. பயணிகளின் நிலை அதோகதியாகத் தான் இருந்தது. சிறுமலை மலைப்பகுதியிலும் இயக்கப்படும் அரசு பஸ் நிலையும் இதேதான். மலைப் பகுதிகளை தவிர்த்து சமவெளி பகுதியில் இயக்கப்படும் பஸ்களின் ஓட்டை உடைசல்களாகவே இயங்குகிறது. பல நேரங்களில் பயணிகளை வைத்து தள்ளித்தான் பஸ்களை இயக்க வேண்டி உள்ளது. மாவட்ட போக்குவரத்து நிர்வாகம் காலாவதியான பஸ்களை அகற்றிவிட்டு புதிய பஸ்களை இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை