உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பஸ்கள் சோதனையில் உரிமம் ரத்து; பள்ளிகளுக்கு நோட்டீஸ்

பஸ்கள் சோதனையில் உரிமம் ரத்து; பள்ளிகளுக்கு நோட்டீஸ்

திண்டுக்கல், : பள்ளி வாகனங்களின் உறுதித்தன்மை சோதனை நடத்தப்பட்டு சிசிடிவி, அவரச கால கதவு உள்ளிட்டவற்றை குறையாக இருந்த 10 பஸ்களின் பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில் ஒரு பஸ்சிற்கான உரிமம் ரத்து செய்யப்பட்டது.பள்ளி வாகனங்களின் உறுதித் தன்மை குறித்து திண்டுக்கல் கலெக்டர் அலுவலக வட்டார போக்குவரத்து சோதனை மைதானத்தில் வாகன ஆய்வாளர் இளங்கோ தலைமையில் ஆய்வு நடந்தது. முதலுதவி பெட்டி, அவசர கால கதவு, பிரேக் திறன், டயர்களின் நிலை, இருக்கையின் கீழ்புறம் தரைப்பலகை, தீத்தடுப்பு கருவி உள்ளிட்டவை குறித்து நடந்த ஆய்வில் ஒரு பஸ்சிற்கான உரிமம் ரத்து செய்யப்பட்டது. 10 பஸ்களின் பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. குறைகளை சரிசெய்து மே 15ல் ஆய்வுக்கு கொண்டு வர அறிவுறுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை