உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பானிபூரி ரசத்தில் புற்றுநோய் ரசாயனம் : கடை,கோடவுன்களில் ஆய்வு

பானிபூரி ரசத்தில் புற்றுநோய் ரசாயனம் : கடை,கோடவுன்களில் ஆய்வு

திண்டுக்கல்: பானிபூரி ரசத்தில் புற்றுநோயை உருவாக்கும் ரசாயனம் இருப்பதாக தகவல் பரவியதையடுத்து திண்டுக்கல்லில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பானிபூரி கடைகள்,கோடவுன்களில் ஆய்வு செய்து சுகாதாரமான முறையில் உணவு பொருட்கள் தயாரிக்க வேண்டும் என வியாபாரிகளை எச்சரித்தனர்.வடமாநில தொழிலாளர்களால் தயாரிக்கப்படும் பானிபூரியை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமாக வாங்கி சாப்பிடுவதால் வடமாநில தொழிலாளர்கள் பலர் தமிழத்தில் விற்பனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த பானிபூரியோடு கலந்து சாப்பிடும் ரசத்தில் புற்றுநோயை உருவாக்கும் ரசாயனம் இருப்பதாக தகவல் பரவியது. திண்டுக்கல் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் செல்வம்,ஜோதிமணி தலைமையிலான அலுவலர்கள் நகரில் 20 இடங்களில் செயல்படும் பானிபூரி கடைகள்,பழநி ரோட்டில் செயல்படும் பானிபூரி தயாரிக்கும் கோடவுன்களில் ஆய்வு செய்தனர். விற்பனை செய்யப்படும் உணவு பொருட்கள் தராமானதாக, சுகாதாரமானதாக உற்பத்தி செய்ய வியாபாரிகளை உணவு பாதுகாப்பு துறையினர் எச்சரித்தனர். இந்த ஆய்வின் போது 5 கடைகளுக்கு ரூ. 5 ஆயிரம் அபாரதம் விதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை