உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கோயிலில் தேர் வெள்ளோட்டம்

கோயிலில் தேர் வெள்ளோட்டம்

பழநி : பழநி முருகன் கோயில் உபகோயிலான லட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் புதிய தேர் வெள்ளோட்ட நிகழ்ச்சி நடந்தது.இக்கோயிலுக்கு ரூ. 35 லட்சம் மதிப்புள்ள புதிய தேர் செய்யப்பட்டுள்ளது. தேருக்கான பிரதிஷ்டை முதற்கால யாக பூஜை ஏப்.13 மாலை துவங்கியது. இதில் தும்பிக்கையாழ்வார் வழிபாடு, வேண்டுதல் விண்ணப்பம், கலசங்கள் வைத்து யாக பூஜை, வழிபாடுகள் நடந்தது. இரண்டாம் கால பூஜை ஏப்.14 அதிகாலை திருமகள் வழிபாடு உடன் துவங்கியது. வேள்வியில் வைக்கப்பட்ட கலசங்களை புதிய தேருக்கு எழுந்தருள செய்யப்பட்டன. காலை 9:00 மணிக்கு திருத்தேர் வடம் பிடிக்க நான்கு ரத வீதிகளில் வெள்ளோட்டம் நடந்தது. கோயில் இணை கமிஷனர் மாரிமுத்து, ஆர்.டி.ஓ., சரவணன், கந்த விலாஸ் உரிமையாளர் செல்வகுமார், பிரேமா, நவீன்விஷ்ணு, நரேஷ்குமரன், முன்னாள் கோயில் இணை கமிஷனர் நடராஜன், வர்த்தகர் சங்க தலைவர் சந்திரசேகர், முன்னாள் கண்காணிப்பாளர் முருகேசன், பொம்மை கடை மணி, கோபி, கவுன்சிலர்கள் பத்மினி முருகானந்தம், சுரேஷ், கண்காணிப்பாளர் அழகர்சாமி கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை