உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சுத்தமானது பஸ் ஸ்டாண்ட் வணிக வளாகம்

சுத்தமானது பஸ் ஸ்டாண்ட் வணிக வளாகம்

திண்டுக்கல், : திண்டுக்கல் பஸ்ஸ்டாண்ட் புதிய கட்டட வணிக வளாகத்தின் பக்கவாட்டு பாதை திறந்த வெளி கழிப்பிடத்தால் அசுத்தமானதை தொடர்ந்து தினமலர் செய்தி எதிரொலியால் துாய்மையடைந்தது.திண்டுக்கல் பஸ்ஸ்டாண்ட் புதிய கட்டட வணிக வளாகம் செயல்பட்டிற்கு வராமலே பூட்டியே கிடக்கிறது. இதன் பக்கவாட்டு பாதை திறந்தவெளி கழிப்பிடமாக மாறியது . இந்த வழியே செல்ல பெண்கள், குழந்தைகள் தயங்கினர். இது தொடர்பாக நேற்று (மே 4) தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக நேற்று காலை 5 க்கு மேற்பட்ட மாநகராட்சி பணியாளர்கள் இந்த பகுதியில் துாய்மை பணியில் ஈடுபட்டனர். வாட்டர் லைனில் அதிவேகமாக பீச்சியடிக்கப்பட்ட நீரில் சுத்தப்படுத்தினர். இதன் பின் அந்த இடத்தில் நறுமண பவுடரை துாவி சென்றனர். இதனால் தற்போது இந்த இடம் புதுப்பொலிவுடன் உள்ளது. இந்த இடத்தை கடந்து கரூர், சேலம் பஸ் நிறுத்தத்திற்கு சென்ற பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டபடி சென்றனர். இதன் அருகிலே இலவச கழிப்பறை இருக்க அங்கு செல்லாமல் இந்த இடத்தில் அசுத்தம் செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இங்கு மாநகராட்சியும் கண்காணிப்பை பலப்படுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

ديفيد رافائيل
மே 05, 2024 17:14

பொது மக்களும் தூய்மையாக வச்சுக்கனும்


nizamudin
மே 05, 2024 09:19

தினமலருக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை