உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தமிழ் புதல்வன் திட்டத்தால் சுமை குறையும் கலெக்டர் பூங்கொடி பேச்சு

தமிழ் புதல்வன் திட்டத்தால் சுமை குறையும் கலெக்டர் பூங்கொடி பேச்சு

திண்டுக்கல், : ''தமிழ்ப்புதல்வன் திட்டத்தினால் பெற்றோர்களின் கல்வி செலவு சுமை குறையும்'' என கலெக்டர் பூங்கொடி பேசினார்.திண்டுக்கல் அரசு எம்.வி.எம். கலைக் கல்லுாரியில் நடந்த தமிழ்ப்புதல்வன் திட்டம் தொடர்பாக மாவட்ட அளவிலான கண்காணிப்புக்குழு உறுப்பினர்கள்,அனைத்துக் கல்லுாரி பொறுப்பு அதிகாரிகளுக்கான ஆய்வுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:2024-- 25 கல்வியாண்டு முதல் அரசு பள்ளிகள்,அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை தமிழ் வழிக்கல்வியில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு தமிழ்ப்புதல்வன் திட்டம் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளில் கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் 6 ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரை பயின்று பின் 9 ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களும் இத்திட்டத்தின் கீழ் பயன் பெறலாம். மாணவர்கள் தங்கள் கல்வி நிறுவனங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். வங்கி சேமிப்பு கணக்கு இல்லாத மாணவர்களுக்கு வங்கி கணக்கு தொடங்க அலுவலர்கள் விரைந்து செயலாற்ற வேண்டும். இதன் மூலம் பெற்றோர் கல்விச் செலவு சுமை குறைகிறது என்றார். மாவட்ட சமூக நல அலுவலர் புஷ்பகலா, முன்னோடி வங்கி மேலாளர் அருணாச்சலம் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை