உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கலெக்டர் அலுவலக உதவி மையத்தில் இல்லை அலுவலர்கள் அனைத்து பணிகளையும் போலீசாரே செய்வதால் சிரமம்

கலெக்டர் அலுவலக உதவி மையத்தில் இல்லை அலுவலர்கள் அனைத்து பணிகளையும் போலீசாரே செய்வதால் சிரமம்

திண்டுக்கல், : திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மனு போடும் பெட்டி அருகே உள்ள உதவி மையத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் யாரும் இல்லாமல் காலியாக உள்ளது. இதனால் அனைத்து பணிகளையும் போலீசாரே செய்வதாக புலம்புகின்றனர்.திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் திங்கள் கிழமைகளில் நடக்கும் குறைதீர் கூட்டம் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் நடத்தப்படாமல் , மனு கொடுக்க வரும் மக்கள் மனு வழங்க தனி பெட்டி வைக்கப்பட்டுள்ளது. இதில் பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுவாக போட்டு செல்கின்றனர். இதன் அருகே உதவி மையம் உள்ளது. இங்கு அலுவலர்கள் இல்லாமல் காலியாக உள்ளது. இங்கு அமர வேண்டிய அலுவலர்களும் தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி மெத்தனப்போக்கில் உள்ளனர்.ஆனால் மனுவை பெட்டியில் போட வரும் மக்களுக்கு உதவி செய்வது உள்ளிட்ட அனைத்து பணிகளையும் பாதுகாப்பு பணி போலீசாரே செய்கின்றனர். சில நேரங்களில் இதன் வெளியிலும் பல பிரச்னைகள் நடக்கிறது. அதையும் போலீசாரே ஒரே நேரத்தில் கவனித்து கொள்வதால் போலீசார் பல நெருக்கடிகளை சந்திக்கின்றனர். நுாற்றுக்கணக்கான மக்கள் வரும் நிலையில் வருவாய்துறை சார்ந்த ஒரு அலுவலராவது மக்களுக்கு வழிகாட்ட உதவி மைய பணியில் ஈடு படலாமே . போலீசாரோ நாங்கள் பாதுகாப்பு பணியை மேற்கொள்வதா,வழிகாட்டியாக இருப்பதா என புலம்புகின்றனர். இதுதவிர கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் அமைக்கப்பட்ட உதவி மையத்தில் 6 மாதங்களுக்கும் மேலாக ஒருவர் கூட அமர்வதில்லை. காத்து வாங்கும் மையமாகவே இது செயல்படுகிறது. இதனால் கலெக்டர் அலுவலகம் வரும் மக்கள் திணறுகின்றனர். இதன் மீது மாவட்ட நிர்வாகம்தான் தனி கவனம் செலுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை