உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மலைக்கிராமங்களில் தொடரும் வறட்சி

மலைக்கிராமங்களில் தொடரும் வறட்சி

செம்பட்டி: ஆத்துார் காமராஜர் நீர்த்தேக்க நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாத சூழலில் தண்ணீர் வரத்தின்றி நீர்மட்டம் குறைகிறது.மேற்குத் தொடர்ச்சி மலையின் பெரும்பாறை, தாண்டிக்குடி, மஞ்சள்பரப்பு, புல்லாவெளி ஆகியவற்றை நீர்பிடிப்பு பகுதியாக கொண்டு ஆத்துார் காமராஜர் நீர்த்தேக்கம் உள்ளது. திண்டுக்கல் மாநகராட்சியின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ள நீர்த்தேக்கம் கடந்தாண்டு 3 முறை நிரம்பி (மொத்த நீர்மட்டம் 24 அடி) மறுகால் பாய்ந்தது. மாநகராட்சி வழித்தட கிராமங்கள் உள்ளிட்ட குடிநீர் திட்டங்களுக்காக தொடர்ந்து தண்ணீர் எடுக்கப்படுகிறது. சில நாட்களாக நீர்பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது மேகமூட்டம் மட்டுமே தொடர்கிறது. பரவலாக சில இடங்களில் மழை பெய்தபோதும் இங்கு சாரல் மழை கூட இல்லை. வாய்க்காலில் வரத்து நீர் குறிப்பிடத்தக்க அளவில் இல்லை. கூழையாற்று ஓடையிலும் தண்ணீரின்றி வறண்டுள்ளது. நீர் வரத்தின்றி குறைந்து வந்த நீர்த்தேக்க நீர்மட்டம் நேற்றைய நிலவரப்படி 14.3 அடியாக இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை