வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அரசு நிர்வாகம் சரியான முறையில் செயல் திறன் இல்லை
மேலும் செய்திகள்
கார் மோதி விவசாயி பலி
14 minutes ago
பூட்டை உடைத்து பணம் கொள்ளை
14 minutes ago
பெருமாள் கோயிலில் பகல் பத்து உற்ஸவம்
16 minutes ago
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் நகராட்சி வளாகத்தில் உள்ள ஆதார் மையத்தில் அதிகாலை முதல் கூட்டம் அலைமோதுவதால் தொலைதுாரங்களில் இருந்து வரும் மக்கள் பாதிப்புக்கு ஆளாகின்றனர். கூடுதல் பணியாளர்கள் நியமித்து பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.ஒட்டன்சத்திரத்தில் நகராட்சி அலுவலக ளாகத்தில் உள்ள ஆதார் மையம் மட்டுமே செயல்பட்டு வருகிறது. தாசில்தார் அலுவலகத்தில் பல மாதங்களாக செயல்படவில்லை. இதே போல் போஸ்ட் ஆபீசில் ஒரு வாரத்திற்கு மேலாக ஆதார் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.அரசின் நலத்திட்ட உதவிகள், வேலைவாய்ப்பு, கல்வி நிறுவனங்கள், வங்கிகள் என ஏ டூ இசட் வரை ஆதார் தேவை என்பதால் பொதுமக்கள் ஆதார் மையங்களுக்கு படையெடுக்கின்றனர். இதனால் தினமும் கூட்டம் அலைமோதுகிறது. ஒட்டன்சத்திரம் பகுதியில் செயல்படும் ஒரே ஒரு ஆதார் மையமான நகராட்சி வளாகத்திற்கு தினமும் நுாற்றுக்கணக்கான மக்கள் ஆதார் கார்டு வாங்கவும் புதுப்பிக்கவும் வருகின்றனர். ஒரே பணியாளர் மட்டுமே உள்ளதால் ஒரு நாளைக்கு குறைந்த அளவு டோக்கன்களே விநியோகம் செய்யப்படுகிறது. டோக்கன்கள் வாங்க பல கிலோமீட்டர் அப்பாலிருந்து வரும் மக்கள் அதிகாலை 4:00 மணிக்கு வந்து காத்திருந்தாலும் அனைவருக்கும் டோக்கன் கிடைப்பதில்லை. இவர்கள் அடுத்தடுத்த நாட்கள் வந்தாலும் டோக்கன் பெற முடியாமல் திரும்பிச் செல்லும் நிலை நீடிக்கிறது. இதனால் இவர்களுக்கு காலம், பணவிரயம் ஆகிறது.இதை கருதி ஒட்டன்சத்திரம் தாலுகா அலுவலகத்தில் செயல்பட்ட மையத்தை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், நகராட்சி அலுவகத்தில் உள்ள ஆதார் மையத்தில் கூடுதல் பணியாளர்களை நியமித்தும் இப் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசு நிர்வாகம் சரியான முறையில் செயல் திறன் இல்லை
14 minutes ago
14 minutes ago
16 minutes ago