உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வேல் வைத்து முருக பக்தர்கள் வழிபாடு

வேல் வைத்து முருக பக்தர்கள் வழிபாடு

கோபால்பட்டி, : கோபால்பட்டியில் முருக பக்தர்கள் வேல் வைத்து கூட்டுப் பிரார்த்தனை செய்து அன்னதானம் வழங்கிய நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். கோபால்பட்டி, கே.அய்யாபட்டி, வேம்பார்பட்டி, செடிப்பட்டி, பெருமாள்கோவில்பட்டி, கணவாய்பட்டி உள்ளிட்ட சுற்று கிராமங்களைச் சேர்ந்த முருக பக்தர்கள், ஸ்ரீ பழநி ஆண்டவர் கார்த்திகை குழுவினர் இணைந்து கோபால்பட்டியில் வேல் வைத்து கூட்டு பிரார்த்தனை மேற்கொண்டனர். கோவை மாவட்டத்தைச் சேர்ந்த சண்முகர் அறக்கட்டளை அன்னதான கூட நிர்வாகி முருக பக்தர் தவசித்தார் சே.மனோகரன் சுவாமி கலந்து கொண்டார். தொடர்ந்து வேல் வைத்து, மலர் அலங்காரம் செய்து சிறப்பு பூஜை செய்ய, முருகனின் திருவிளையாடல், லட்சார்ச்சனை பாடி கூட்டு வழிபாடு நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ