உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / திண்டுக்கல் மாநகராட்சி மின் பாக்கி ரூ.9.50 கோடி

திண்டுக்கல் மாநகராட்சி மின் பாக்கி ரூ.9.50 கோடி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சி 2022லிருந்து 2024 வரை 3 ஆண்டுகளாக மின்வாரியத்திற்கு ரூ.9.50 கோடி மின் கட்டணம் செலுத்தாத நிலையில் மின்வாரியத்தினர் மாநகராட்சி அலுவலகத்திற்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.திண்டுக்கல் மாநகராட்சி மின் பயன்பாடுகளுக்கான கட்டணத்தை 2022 லிருந்து 2024 வரை 3 ஆண்டுகளாக செலுத்தவில்லை. இதன் பாக்கி ரூ.9.50 கோடியை எட்டியுள்ளது. மின்வாரிய அதிகாரிகள் மாநகராட்சி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு மின் கட்டணத்தை செலுத்த பல முறை அறிவுறுத்தியும் செலுத்தவில்லை.இதை தொடர்ந்து மின்வாரியத்தினர் மாநகராட்சி நிர்வாகத்திற்கு டிமான்ட் நோட்டீஸ் வழங்கி எச்சரித்துள்ளனர். திண்டுக்கல் மாநகராட்சியில் ஏற்கனவே ரூ.4.66 கோடி கையாடல் நடந்த விவகாரத்தில் மக்கள் வரிப்பணத்தை மீட்க நிர்வாகத்தினர் போராடுகின்றனர். தற்போது ரூ.9.50 கோடி மின் பாக்கி வேறு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.திண்டுக்கல் மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் கூறுகையில் ,'' மின் கட்டணத்தை செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ