உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தே.மு.தி.க., ஆர்ப்பாட்டம்

தே.மு.தி.க., ஆர்ப்பாட்டம்

எரியோடு : மின் கட்டண உயர்வு, ரேஷன் பொருள்களை முறையாக வழங்காதது , கர்நாடக அரசு காவிரி நீரை முறையாக திறந்து விடாததை கண்டித்தும் திண்டுக்கல் மேற்கு, மாநகர் மாவட்ட தே.மு.தி.க., சார்பில் எரியோட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மேற்கு மாவட்ட செயலாளர் சிவக்குமார் தலைமை வகித்தார். மாநகர் மாவட்ட செயலாளர் மாதவன் முன்னிலை வகித்தார். மாவட்ட பொருளாளர் திருமுருகன் வரவேற்றார். செய்தி தொடர்பாளர் நடிகர் ராஜேந்திரநாத், அவை தலைவர்கள் செல்லமுத்து, முகமதுயூசுப், மாநகர் மாவட்ட பொருளாளர் மணிகண்டன், மாநில பொதுக்குழு உறுப்பினர் தனபாலன், தலைமை செயற்குழு உறுப்பினர் முருகன் பேசினர். நகர செயலாளர் சங்கர் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி