உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / திண்டுக்கல்லில் தி.மு.க., ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல்லில் தி.மு.க., ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் : மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து திண்டுக்கல் கிழக்கு, மேற்கு மாவட்ட தி.மு.க., சார்பில் திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில்குமார் எம்.எல்.ஏ., எஸ்.காந்திராஜன் எம்.எல்.ஏ., தலைமை வகித்தனர்.எம்.எல்.ஏ., செந்தில்குமார் பேசியதாவது : மத்திய அரசு தங்களது ஆட்சியை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக பீகார் ஆந்திர மாநிலங்களுக்கு அதிக அளவு சிறப்பு நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை.அதிகமாக ஜி.எஸ்.டி., வரி கட்டக்கூடிய மாநிலமாக தமிழகம் உள்ளது. அந்த பணத்தை தமிழக வளர்ச்சிக்காக பயன்படுத்த வேண்டும். ஆனால் குறைந்த வரி கட்டக்கூடிய உத்திரபிரதேசம் போன்ற பா.ஜ., ஆளும் மாநிலங்களுக்கு அதிக அளவு திட்டங்களையும் நிதியையும் வழங்குகின்றனர், என்றார்.எம்.எல்.ஏ., காந்திராஜன் பேசியதாவது : எதிர்கட்சிகள் ஆளும் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களை மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறது என்பதற்கு இந்த பட்ஜெட் ஒரு எடுத்துக்காட்டாக அமைந்திருக்கிறது. தமிழ், திருக்குறள் என தமிழகத்தை சுற்றி வந்த பா.ஜ., தலைவர்களின் போலி முகம் இந்த பட்ஜெட் அறிக்கையின் மூலம் வெளிப்பட்டிருக்கிறது. ஜி.எஸ்.டி., வரியில் தமிழகத்திற்கான இழப்பீட்டுத் தொகை ரூ.20ஆயிரம் கோடியை இதுவரை மத்திய அரசு வழங்கவில்லை. நிதி தர வேண்டும் என மத்திய அரசிடம் யாசகம் கேட்கவில்லை. தர வேண்டிய நிதியை கூட மத்திய அரசு தயாராக இல்லை என்றார்.மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா, கிழக்கு, மேற்கு மாவட்ட அவைத்தலைவர்கள் காமாட்சி, மோகன், துணைச் செயலர்கள் ராஜாமணி, பிலால் உசேன், நாகராஜ், மார்கெட் மேரி, பொருளாளர்கள் விஜயன், சத்தியமூர்த்தி, ஒன்றிய செயலர்கள் நெடுஞ்செழியன், வெள்ளிமலை மாநகர பொருளாளர் சரவணன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ