உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கொடை தெருக்களில் கட்டுமான பொருட்கள்

கொடை தெருக்களில் கட்டுமான பொருட்கள்

கொடைக்கானல்: கொடைக்கானல் நகரில் தெருக்களில் ரோடை ஆக்கிரமித்து கட்டுமான பொருட்களை குவிப்பதால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டுள்ளது. கொடைக்கானல் நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளன. ஆங்காங்கே கொடைக்கானலில் உள்ள தெருக்களில் புதிய கட்டுமானங்கள் நடக்கும் நிலையில் இதற்கான கட்டுமான பொருட்கள் ரோட்டில் குவிப்பது வாடிக்கையாக உள்ளது. குறுகிய தெருக்களில் ரோட்டோரம் நிறுத்தப்படும் வாகனங்களால் ஏற்கனவே நெரிசல் ஏற்படுகிறது. இந்நிலையில் கட்டுமான பொருட்கள் குவிப்பதால் மேலும் பாதிப்பு ஏற்பட்டு விபத்துகளும் ஏற்படுகின்றன. கொடைக்கானல் நகராட்சியில் போக்குவரத்துக்கு இடையூறாக குவிக்கப்படும் கட்டுமான பொருட்களை அகற்ற இனியாவது நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ