உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தொழிலாளர்களுக்கு குடிநீர்

தொழிலாளர்களுக்கு குடிநீர்

திண்டுக்கல் : தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக திண்டுக்கல் 3வது பணிமனையில் தொழிலாளர்களுக்கு முறையான குடிநீர் வசதி ஏற்படுத்தவில்லை. இதனால் நுாதனபோராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து திண்டுக்கல் மண்டலத்துக்குட்பட்ட அனைத்து பணிமனைகளிலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி ஏற்படுத்த மண்டல பொது மேலாளர் டேனியல் சாலமன் உத்தரவிட்டார்.அதன்படி நேற்று முதல் திண்டுக்கல் கிளை 1, 3 பணிமனைகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டது. கோட்ட மேலாளர் ரமேஷ் தொடங்கி வைத்தார். வணிக மேலாளர் சக்தி, தொழில்நுட்ப மேலாளர் சத்தியமூர்த்தி பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ