உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல்: தொடக்கக் கல்வித் துறை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. திண்டுக்கல் .சி.எஸ்.ஐ., பள்ளியில் திண்டுக்கல் தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வுப் பணி நடைபெறுகிறது. இந்நிலையில் அரசாணை 243யை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்டத் தலைவர் ஆர்தர் தலைமை வகித்தார். டிட்டோ ஜேக் மாநில உயர்மட்டக் குழு உறுப்பினர் வின்சென்ட் பால்ராஜ் முன்னிலை வகித்தார். தொடக்கக் கல்வித் துறையில் 60 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வந்த ஒன்றிய முன்னுரிமையை மாநில முன்னுரிமையாக மாற்றப்பட்ட நடவடிக்கை ரத்து செய்ய வலியுறுத்தி கோஷமிட்டனர்.ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் 200க்கு மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். ஒட்டன்சத்திரம் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். ஆசிரியர்கள் பஸ்சில் ஏற்றப்பட்ட நிலையில் கைது இல்லை எனக்கூறி கீழே இறக்கிவிடப்பட்டனர்.இதன் பின் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சண்முகவேலுவிடம் கோரிக்கைகளை எடுத்துக் கூற அனுமதித்த போலீசார் தடுப்புகளை அகற்றினார்.தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொருளாளர் கணேசன் கூறியதாவது:ஒட்டு மொத்த ஆசிரியர்களை பாதிக்கும் அரசாணை 243 ஐ தமிழக அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து மாநில உயர்மட்ட குழு கூடி முடிவெடுக்கும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை