உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தாண்டிக்குடி மலை ரோட்டில் சேதமான தடுப்புச்சுவரால் அச்சம்

தாண்டிக்குடி மலை ரோட்டில் சேதமான தடுப்புச்சுவரால் அச்சம்

தாண்டிக்குடி : தாண்டிக்குடி வத்தலக்குண்டு ரோட்டில் சேதமான தடுப்பு சுவரால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் இதன்மீது கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஓராண்டிற்கு முன் நெடுஞ்சாலைத்துறை தடியன்குடிசை பள்ளதாக்கு பகுதியில் கான்கிரீட் தாங்கு சுவர்களை கட்டமைத்தனர். தொடர்ந்து பணிகள் தரமற்ற நிலையில் நடந்ததால் அவ்வப்போது இவை சரிந்து விழுந்தன. தொடர் புகார்களை வாகன ஓட்டிகள் தெரிவித்த போதும் நெடுஞ்சாலைத்துறை கண்டுகொள்ளவில்லை. சில மாதங்களுக்கு முன் பெய்த கனமழையின் போது தடியன்குடிசை கானல்காடு இடையே இரு இடங்களில் தடுப்புச்சுவர்கள் குறுகிய ரோட்டில் சரிந்தது. இப்பகுதியை கடந்து செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. மேலும் சரிந்த பகுதியில் நெடுஞ்சாலைத்துறை அறிவிப்பு பலகை,ஒளிரும் கயிறுகள் கட்டப்படாத நிலையில் வெறுமனே விட்டுள்ளனர். குறுகிய ரோட்டில் எதிரே வாகனங்கள் இடம் கொடுக்கும் நிலையில் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இதுபோன்று ஏராளமான இடங்களில் கட்டமைக்கப்பட்ட கான்கிரீட் தாங்கு சுவர்கள் சரிவடைந்து நிலையில் உள்ளன. துவக்கத்தில் ஆத்துார் நெடுஞ்சாலைதுறை கட்டுப்பாட்டில் இருந்தபோது பராமரிப்பு பணி துரிதம் பெற்ற நிலையில், கொடைக்கானல் நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டிற்கு வந்த நிலையில் மெத்தனப்போக்கோடு அதிகாரிகள் செயல்படும் நிலை தொடர்கிறது. மாவட்ட நிர்வாகம் இதன்மீது கவனம் செலுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை