| ADDED : ஏப் 17, 2024 05:25 AM
திண்டுக்கல் : திண்டுக்கல் நகரில் பல்வேறு பகுதிகளில் வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை அமோகமாக நடக்கிறது. இதனால் பலரும் பாதிக்கப்படும் நிலையில் போலீசார் இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட்,நாகல்நகர்,கோட்டை மாரியம்மன் கோயில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் தினமும் வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை ஜோராக நடக்கிறது. இதை பள்ளி,கல்லுாரி மாணவர்கள் முதல் கூலித்தொழிலாளிகள் வரை பயன்படுத்துகின்றனர். இதனால் பலரும் வருவாயை இதில் முதலீடு செய்து குடும்பத்தை கவனிக்காது உள்ளனர். சிலர் கடன் வாங்கி லாட்டரி சீட் வாங்கி கடனை கட்டமுடியாமல் தற்கொலை செய்வதும் அடிக்கடி நடக்கின்றன. போலீசாரோ ஒரு சில லாட்டரி சீட்டு விற்பனையாளர்களை கைது செய்கின்றனர். இருந்தபோதிலும் லாட்டரி விற்பனையாளர்கள் பலரும் பெரும் முதலாளிகளாக வீதிகளில் சுற்றுகின்றனர். இவர்கள் போலீசாருக்கு தெரியாமல் ஆங்காங்கு லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டு அப்பாவிகளை குறிவைத்து ஆசை காட்டி ஏமாற்றுகின்றனர். சமூகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் லாட்டரி விற்பனையை கட்டுப்படுத்த போலீஸ் நிர்வாக நடவடிக்கை அவசியமாகிறது .திண்டுக்கல் எஸ்.பி., பிரதீப், '' திண்டுக்கல் நகரில் லாட்டரி டிக்கெட் விற்பனை குறித்து ஆய்வு செய்து அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் ''என்றார்.