உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மாற்றுத்திறனாளிக்கு இலவச ஸ்கூட்டர்

மாற்றுத்திறனாளிக்கு இலவச ஸ்கூட்டர்

நத்தம்: நத்தம் வேம்பார்பட்டியில் உள்ள தனது இல்லத்தில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தேசிய கொடியை ஏற்றி இனிப்பு வழங்கினார். தொடர்ந்து மாற்றுத்திறனாளிக்கு 100 சதவீத மானியத்தில் ரூ.1.25 லட்சம் மதிப்பிலான ஸ்கூட்டர் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மந்தநாயக்கன்பட்டியைச் சேர்ந்த மாயாவு 58, என்ற மாற்றுத்திறனாளி விவசாயிக்கு முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பரிந்துரையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் இலவச ஸ்கூட்டர் வழங்கப்பட்டது. தொழிலதிபர் வி.அமர்நாத், மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் சுப்பிரமணி, ஒன்றிய ஜெ.பேரவை செயலாளர் ராஜேந்திரன், இணைச் செயலாளர்கள் விஜயன், குணசேகர், ஒன்றிய கவுன்சிலர்கள் ஹரிஹரன், ரமேஷ் பாபு, முன்னாள் ஊராட்சி துணைத் தலைவர் கிருஷ்ணன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை