உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கொடைக்கானல் பகுதியில் ஜெலட்டின் டெட்டனேட்டர்கள்: 3 பேர் கைது

கொடைக்கானல் பகுதியில் ஜெலட்டின் டெட்டனேட்டர்கள்: 3 பேர் கைது

கொடைக்கானல்:கொடைக்கானல் செம்பிரான்குளம் பகுதியில் கிடந்த ஜெலட்டின் குச்சிகள் , டெட்டனேட்டர்களை வனத்துறையினர் கண்டெடுத்தனர். இதுதொடர்பாக மூன்று பேரை போலீசார் கைது செய்துஉள்ளனர்.ஒட்டன்சத்திரம் வனச்சரகத்துக்கு உட்பட்ட செம்பிரான்குளம் பாண்டியன் பாறையில் வனகாப்பாளர்கள் மதுரை வீரன், சிவகுமார், வேட்டை தடுப்பு காவலர் காமராஜ் ஆகியோர் ரோந்து சென்றனர்.பாண்டியன் பாறையில் 15 ஜெலட்டின் குச்சிகள், 23 டெட்டனேட்டர், 18 என்.இ.டி., டெட்டனேட்டர்கள் கிடந்தன.அவற்றை போலீசில் ஒப்படைத்த வனத்துறையினர், புகார் மனுவும் கொடுத்தனர். , மலைப்பகுதியில் தீவிரவாதிகள், நக்சல் நடமாட்டம் உள்ளதா என போலீசார் விசாரணை நடத்தினர்.தனியார் எஸ்டேட்டில் வசிக்கும் மலைவாழ் மக்களுக்கு சாலை அமைக்க சில மாதங்களுக்கு முன் பாறைகள் வெடி வைத்து தகர்க்கப்பட்டன. அதற்காக இந்த வெடி மருந்து பொருட்கள் பயன்படுத்தியது முதற்கட்ட விசாரணையில் தெரிந்தது. மேலும், இந்தப் பணியின் போது கம்ப்ரஷர் வாகனம் விபத்துக்குள்ளாக, கோவிந்தராஜ் என்பவர் காயமடைந்துள்ளார். இதில் சிதறிய வெடி பொருட்களை மறைவாக வைத்திருந்ததும் தெரிய வந்தது. கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த கோவிந்தராஜ், 52, வெடி மருந்துகள் வழங்கிய திண்டுகல்லைச் சேர்ந்த வேல்முருகன், 52, சரவணன், 27, ஆகியோரை கொடைக்கானல் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ