உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / முன்னறிவிப்பின்றி நிறுத்தப்படும் அரசு பஸ் ; 2 கி. மீ., நடை

முன்னறிவிப்பின்றி நிறுத்தப்படும் அரசு பஸ் ; 2 கி. மீ., நடை

கோபால்பட்டி, : திண்டுக்கல்-கே.அய்யாபட்டி அரசு பஸ் முன்னறிவிப்பின்றி நிறுத்தப்படுவதால் 2 கி. மீ., நடையாக சென்று மாற்று பஸ்சில் பயணிக்கும் நிலையில் மக்கள் உள்ளனர்.திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டிலிருந்து தினமும் காலை 6:30 மணிக்கு சாணார்பட்டி வழியாக கே.அய்யாபட்டிக்கு அரசு டவுன் பஸ் இயக்கப்படுகிறது .இந்த பஸ்சில் அய்யாபட்டி, வேம்பார்பட்டி, செடிப்பட்டி, கோம்பைபட்டி, பெருமாள்கோவில்பட்டி சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பள்ளி, கல்லுாரி மாணவர்கள், கூலித்தொழிலாளர்கள் ஏராளமானோர் பயணம் செய்கின்றனர்.இந்நிலையில் நேற்று முன் தினம் காலை இந்த பஸ் கே.அய்யாபட்டிக்கு வரவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த பள்ளி மாணவர்கள் , பயணிகள் 2 கிலோ மீட்டர் துாரம் உள்ள கோபால்பட்டிக்கு நடந்தே சென்றனர். இதுபோன்று இந்த பஸ் முன்னறிவிப்பின்றி அடிக்கடி நிறுத்தப்படுகிறது.பொதுமக்கள் கூறுகையில்,' காலை, மாலை வேலை திண்டுக்கல்யில் இருந்து கே.அய்யப்பட்டிக்கு இயக்கப்படும் அரசு பஸ் ஒருசில நாட்கள் வருவதில்லை.முன்னறிவிப்பின்றி அடிக்கடி நிறுத்தப்படுகிறது. இதனால் காலை வேலைக்கு செல்பவர்கள், பள்ளி, கல்லுாரிக்கு குறித்த நேரத்துக்குள் செல்பவர்கள் பாதிக்கின்றனர். இதனால் காலை, மாலை நேரத்தில் முறையாக அரசு பஸ் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Mani . V
ஆக 15, 2024 04:24

விலையே மதிக்க முடியாத வாக்கை ஆயிரத்துக்கும், ரெண்டாயிரத்துக்கும் விற்றால் இதுதான் நடக்கும்.


சமீபத்திய செய்தி