கொடையில் மூலிகைப் பண்ணை; சட்டசபை ஏடுகள் குழு தகவல்
கொடைக்கானல் : 'கொடை'யில் மூலிகைப் பண்ணை அமைக்க சட்டசபையில் பரிந்துரைக்கப்படும் என சட்டசபை பேரவை ஏடுகள் குழு தலைவர் லட்சுமணன் கூறினார்.கொடைக்கானல் அப்சர்வேட்டரி, பூம்பாறை முருகன் கோயில், மன்னவனுார் அரசு மேல்நிலைப் பள்ளியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் மூலம் கட்டப்படும் சுற்றுச் சுவர், மன்னவனுார் ஆட்டுப்பண்ணை ஆராய்ச்சி மையத்தை சட்டசபை பேரவை ஏடுகள் குழு பார்வையிட்டது. சட்டசபை பேரவை ஏடுகள் குழு தலைவர்மூலிகை பண்ணை அமைக்க சட்டசபையில் பரிந்துரைக்கப்படும் என குழு தலைவர் லட்சுமணன் தெரிவித்தார். தலைமை பொறியாளர் சேதுராமன், திட்ட இயக்குனர் திலகவதி, மத்திய ஆட்டுப்பண்ணை ஆராய்ச்சி முதல்வர் திருமுருகன், அப்சர்வேட்டரி பொறியாளர் ராஜலிங்கம் கலந்து கொண்டனர்.