உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வத்தலக்குண்டு முத்துமாரியம்மன் கோயில் வைகாசி விழா துவக்கம்

வத்தலக்குண்டு முத்துமாரியம்மன் கோயில் வைகாசி விழா துவக்கம்

வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு முத்துமாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.இதையொட்டி நேற்று மஞ்சள் ஆறு கரையிலிருந்து கம்பம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோயிலில் நடப்பட்டது. இதன் பின், கம்பத்திற்கு பெண்கள் பால், மஞ்சள் நீர் ஊற்றி அபிஷேகம் செய்தனர். இதை தொடர்ந்து கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது .முத்துமாரியம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். திருப்பணிக்குழு சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்