உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ரோடு அமைத்து 15 ஆண்டாச்சு... மக்கள் அவதி

ரோடு அமைத்து 15 ஆண்டாச்சு... மக்கள் அவதி

வேடசந்துார் , : குருவனுாரில் இருந்து நரசிங்கபுரம், சீல்நாயக்கன்பட்டி, கூவக்காபட்டி வழியாக வேடசந்துார் செல்லும் ரோடு முதல் சீல்நாயக்கன்பட்டி வரையிலான 6 கி.மீ., தார் ரோடு 15 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட நிலையில் சேதமடைந்துள்ளதால் ரோட்டை புதுப்பிக்க வேண்டும்என்ற கோரிக்கை எழுந்துள்ளது.இந்த ரோடைதான் குருவனுார், குருவனூர் காலனி, வாணிக்கரை நரசிங்கபுரம் உள்ளிட்ட சுற்று பகுதி மக்கள் வேடசந்துார் வர பயன்படுத்துகின்றனர் . இந்த ரோட்டின் வழியாகத்தான் பள்ளி கல்லுாரி, நூற்பாலை வாகனங்கள் சென்று வருகின்றன. தற்போது இந்த ரோடு சேதமடைந்து மெட்டல் ரோடாக மாறி உள்ளது. இதனால் டூவீலர் ஓட்டிகள் மிகுந்த அவதிக்கு ஆளாகின்றனர். கத்தரி, வெண்டை முருங்கை உள்ளிட்ட காய்கறிகளை சந்தைக்கு கொண்டு செல்ல முடியவில்லை என புலம்புகின்றனர்.

ரோடை புதுப்பிப்பியுங்க

எஸ்.ராமலிங்கம், அ.தி.மு.க., ஒன்றிய துணைச் செயலாளர், வேடசந்துார் மேற்கு ஒன்றியம், குருவனுார்: இந்த தார் ரோடு 2009 ல் போடப்பட்டது. வாகன போக்குவரத்து நிறைந்த இந்த ரோடு தற்போது சேதமடைந்துள்ளது. இதனால் பள்ளி கல்லுாரி மாணவர்கள் ,நுாற்பாலை தொழிலாளர்கள் ,விவசாயிகள் அவதிப்படுகின்றனர். இப்பகுதி மக்களின் நலன் கருதி இந்த ரோடை புதுப்பித்து தர மாவட்ட நிர்வாகம் முன் வர வேண்டும்.ஏ.தண்டபாணி, விவசாயி, சீல்நாயக்கன்பட்டி: ரோடு 15 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. இப்பகுதி மக்களுக்கு வேடசந்துார் செல்வதற்கான குறுக்கு வழியாக இந்த ரோடு உள்ளது. சேதமடைந்துள்ள ரோடை வேடசந்துார் எம்.எல்.ஏ., காந்திராஜன் சீல்நாயக்கன்பட்டி வந்தபோது ரோட்டை புதுப்பித்து தர பொதுமக்கள் சார்பில் கேட்டுக்கொண்டோம். அவரும் ஒப்புதல் தந்து அதே வழித்தடத்தில் காரில் சென்று ரோட்டையும் பார்வையிட்டார்.

நிதி ஒதுக்க காலதாமதம்

எம்.முருகன், ஊராட்சி முன்னாள் துணைத் தலைவர், பாலப்பட்டி ஊராட்சி, அழகாபுரி:குருவனுார் சீல்நாயக்கன்பட்டி தார் ரோடு, மெட்டல் ரோடாகவே மாறிவிட்டது. மழை காலங்களில் ரோட்டில் செல்வது மிக சிரமம். குண்டும் குழியுமாக இருப்பதால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்கிறது. இந்த ரோட்டை புதுப்பிக்க மக்கள் தொடர்ந்து கோரி வருகின்றனர். இந்த ரோட்டை சீரமைக்க நிதி ஒதுக்க காலதாமதமும் செய்கின்றனர். பாலப்பட்டி ஊராட்சி குருவனூர் மற்றும் சுற்றுப்பகுதி மக்களுக்கு, வேடசந்தூர் செல்வதற்கான குறுக்கு வழி இது என்பதால், போக்குவரத்து கூடுதலாக உள்ளது. இந்த ரோட்டை வேடசந்தூர் ஒன்றிய நிர்வாகம் விரைந்து புதுப்பிக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை